சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேகரித்த 137 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேகரித்த 137 பேர் கைது
நாட்டில் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேகரித்த 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 429 சுற்றிவளைப்புகளில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்தச் சுற்றிவளைப்பின் போது 27,000 லீற்றர் பெற்றோல் மற்றும் 22,000 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
பெற்றோல் நிலையங்களில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் விற்கப்படும் எரிபொருளை சேகரித்து பல்வேறு நபர்கள் அதிக விலைக்கு விற்பதாக வந்த முறைப்பாட்டை அடுத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
எரிபொருளை மோசடி செய்து அதிக விலைக்கு விற்பது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிந்தால் 118 – 119 மற்றும் 1997 ஆகிய எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம்.
May be an image of 2 people

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்