2 மில்லியன் அமெரிக்க டொலர்களை சுகாதாரத் துறைக்கு நன்கொடையாக வழங்குகிறது இலங்கை கிரிக்கெட் சபை .
2 மில்லியன் அமெரிக்க டொலர்களை சுகாதாரத் துறைக்கு நன்கொடையாக வழங்குகிறது இலங்கை கிரிக்கெட் சபை .
அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நாட்டின் சுகாதார துறைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, குழந்தைகள், சிறுவர் பராமரிப்புக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக ‘குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு’ 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்படும்.
புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளன.
நாட்டிற்கு தேவைப்படும் இந்த தருணத்தில் இந்த நன்கொடையை வழங்குவதில் ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை மிகவும் மகிழ்ச்சியடைகிறது, மேலும் இந்த சவாலான காலகட்டத்தை முறியடிக்க எமது தேசத்திற்கு எமது பூரண ஆதரவை வழங்குவோம் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார். .
சுகாதாரத் துறையின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு, அந்தந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு நிதி உடனடியாக நன்கொடையாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நன்கொடையை வழங்குவதற்கு நேற்று கூடிய இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை