மக்கள் இன்னமும் வரிசைகளில் – புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னரும் எதுவும் இடம்பெறவில்லை- சனத்

மக்கள் இன்னமும் வரிசைகளில் – புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னரும் எதுவும் இடம்பெறவில்லை- சனத்
அரசமைப்பின் 20வது திருத்தத்தை நீக்கவேண்டும் என சனத்ஜெயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது முகநூல் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
20வது திருத்தத்தை ஒழிப்பதுதான் அரசாங்கத்தின்நேர்மையை தீர்மானிப்பதற்கு உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ள அவர் புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்களாகியும் எதுவும் இடம்பெறவில்லை என்பது கவலையளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.
எங்கள் மக்கள் இன்னமும் வரிசைகளில் அவலப்படுகின்றனர் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் இதுபோதும் என்று நினைத்து மக்களின் துன்பங்களை தயவு செய்து மறந்துவிடாதீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
May be an image of 1 person and standing

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்