தம்பராவ குளத்தில் குளிக்கச் சென்ற தந்தையும் இரு மகன்களும் பலி!

 

மஹியங்கனை, தம்பராவ குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 45 வயதுடைய ஒருவரும் இரண்டு மகன்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பல மணிநேரம் ஆகியும் மூவரும் வீடு திரும்பாததால் நேற்று மாலை பிரதேசவாசிகள் அந்த இடத்தை ஆய்வு செய்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த மூவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் 45 வயதுடைய ஒருவரும் அவரது 10 மற்றும் 15 வயதுடைய மகன்களும் ஆவர்.

சடலங்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்