பிரதமரின் வீட்டினை அண்டிய பகுதியில் போராட்டங்களை தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

பிரதமரின் வீட்டினை அண்டிய பகுதியில் போராட்டங்களை தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு அமைந்துள்ள கருவாத்தோட்டம் 5 ஆம் ஒழுங்கை, மற்றும் அந்தப் பகுதியில் உள்ள வீதிகள் மற்றும் பாடசாலை ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இதேவேளை, இன்று பிற்பகல் கொழும்பு – கிருலப்பனை – பூங்கா வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதன்காரணமாக பூங்கா வீதியை அண்மித்துள்ள பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது
No photo description available.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்