விபத்தில் சிக்கிய முத்தையன்கட்டு பாடசாலை அதிபர் சத்தியசீலன் பரிதாப மரணம்!

விபத்தில் சிக்கிய முத்தையன்கட்டு பாடசாலை அதிபர் சத்தியசீலன் பரிதாப மரணம்!
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த முல்லைத்தீவு முத்தையன் கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் கந்தையா சத்தியசீலன் இன்று உயிரிழந்துள்ளார்.
ஏ – 09 நெடுஞ்சாலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை டிப்பர் வாகனம் மோதித் தள்ளியதால் விபத்து நிகழ்ந்திருந்தது.
சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கந்தையா சத்தியசீலன் என்றும் அவர் முல்லைத்தீவு முத்தையன்கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் என்றும் தெரியவந்துள்ளது.
May be an image of outdoors and text that says 'Accident'

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்