குருநாகலில் எரிபொருள் பௌசர் கவிழ்ந்து விபத்து; வீணானது பெற்றோல்

குருநாகலில் எரிபொருள் பௌசர் கவிழ்ந்து விபத்து; வீணானது பெற்றோல்
கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது அந்த பௌசரில் 13,200 லீற்றர் பெற்றோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இந்த விபத்தில் வீணாகியுள்ளது.
குருநாகல் தீயணைப்புப் பிரிவினர் அந்த பௌசரில் தண்ணீர் விசிறி எரிபொருள் வெளியேறாமல் இருக்க அதனை மீண்டும் வீதிக்கு கொண்டு சென்றனர்.
மழையுடனான காலநிலையால் பௌசர் வழுக்கி விழுந்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
No photo description available.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்