கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல்….

வடமலை ராஜ்குமாா்

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களை நினைவேந்தும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியால் எதிர்வரும் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்து கலாச்சார மண்டபத்தில்  இடம்பெறவுள்ளது. ஏன கட்சியின் மாவட்ட கிளை தலைவர் ச.குகதாசன் இன்று ஊடகங்களுக்கு (27) தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கும் போது திருகோணமலை மாவட்டத்தில் கடந்த பல வருடகாலமாக தமிழரசு கட்சியில் இருந்து மக்களுக்காக பாடுபட்ட கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர்.க.துரைரெட்ணசிங்கம் அவர்களையும் இது போல தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் திருகோணமலை நகரசபை உறுப்பினருமான கோ.சத்தியசீலராஜா அவர்களையும் ,தமிழர கட்சியின் குச்சவெளி திரியாய் வட்டார கிளையின் முன்னாள் தலைவர் பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் கிண்ணியா பைசல் நகர் வட்டாரகிளை முன்னாள் தலைவர் மு. க. மஹ்ரூப் ஆகியோரை நினைவு கோரி அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு; இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு மாவட்டம் முழுவதும் உள்ள 60 வட்டக்கிளை உறுப்பினர்கள் பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் உறவினர் மற்றும்இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பொதுச்செயலாளர் டாக்டர்.சத்தியலிங்கம்,; பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன்,இரா.சாணக்கியன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
எனவே இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு மாவட்டத்தின் எம் மக்களுக்காக உழைத்து உயிரிழந்த அமரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் ச.குகதாசன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்