கோழி இறைச்சி வாங்கச் சென்ற சிறுமி மாயம்

கோழி இறைச்சி வாங்கச் சென்ற சிறுமி மாயம்
அதுலுகம அல் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் 9ஆம் ஆண்டில் கல்வி கற்கும் பாத்திமா ஆயிஷா என்ற மாணவி காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் மூன்றாமவரான இவர், நேற்று(27) காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து 200 மீற்றர் தொலைவிலுள்ள கடைக்கு கோழி இறைச்சி வாங்கச் சென்றதாகவும், வீடு திரும்பவில்லை எனவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமி கடையை விட்டு வெளியேறுவது அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
May be an image of 1 person and text

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்