பல்கலைக்கழகப் பேராசிரியர்களால் விவசாயத் துறைக்கான திட்டங்கள் முன்மொழிவு
பல்கலைக்கழகப் பேராசிரியர்களால் விவசாயத் துறைக்கான திட்டங்கள் முன்மொழிவு
இலங்கையின் அண்மைய பொருளாதார மற்றும் உணவு விநியோகப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு, மூன்று பல்கலைக்கழகங்களின் விவசாயப் பேராசிரியர்கள் குழு எதிர்கால விவசாய அபிவிருத்தி மற்றும் உணவுப் பாதுகாப் புக்கான முன்மொழிவைத் தயாரித்துள்ளது.
அதன்படி, பேராதனைப் பல்கலைக்கழகம், ருஹுணு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 பேர் கொண்ட பேராசிரியர்கள் குழுவினர், முன்மொழிவுகளின் பட்டியலைத் தொகுத்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால என மூன்று பிரிவுகளின் கீழ் விவசாய நடவடிக்கைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பை ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டு முன்மொழிவுகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர்கள், எதிர்காலத்தில் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய உணவு நெருக்கடியைச் சமாளிக்க வேண்டு மாயின் முன்மொழிவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

கருத்துக்களேதுமில்லை