காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

பண்டாரகம, அதுலுகம பிரதேசத்தில் நேற்று (27) காலை காணாமல் போன சிறுமியின் சடலம் சற்று முன்னர் அதுலுகம பிரதேசத்தில் வயல் ஒன்றின் அருகில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


9 வயதுடைய பாத்திமா ஆயிஷா நேற்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள கடைக்கு கோழி இறைச்சி வாங்கச் சென்றுள்ளார். ஆனால் சிறுமி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

தேடுதல் பணிகள் முடுக்கி விடப்பட்ட நிலையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்