அடுத்த மாதம் எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியக் கடன் தொகை போதாது

ஜூன் மாதத்துக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சுமார் 554 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


இந்த அந்நியச் செலாவணித் தேவையில் 100 மில்லியன் டொலர் தற்போதுள்ள இந்திய கடன் திட்டத்தின் கீழ் பெறப்பட உள்ளது.

இந்தியாவில் இருந்து பெறப்படும் புதிய 500 மில்லியன் டொலர் கடன் வசதி குறித்தும் தாம் விவாதித்ததாக அமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (30) காலை மத்திய வங்கி ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் இருப்புகளின் விபரத்தை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்