பொருளாதார நெருக்கடியில் அவதியுறும் மக்களுக்கு அரசாங்க மானியங்கள் வழங்கிவைப்பு

நூருல் ஹுதா உமர்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது அமுலிலுள்ள நலனோம்பு நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் சமுர்த்தி நலுனுதவி பெற்றுவரும் குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி காத்திருப்பு பட்டியலிலுள்ள குடும்பங்களுக்கு உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் மூன்று மாதங்களுக்கு மானியம் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்திற்கமைய, அம்பாறை மாவட்ட இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இறக்காமம் சமுர்த்தி வங்கியினால் சமுர்த்தி நன்மை பெற்றுவரும் குடும்பங்களுக்கான குறித்த மானியத் தொகை வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (30) ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது.இதில் இறக்காமம் சமுர்த்தி வங்கியில் மாதாந்தம் மானியம் பெற்றும் வரும் சுமார் 1800 குடும்பங்களும், சமுர்த்தி காத்திருப்புப் பட்டியலிலுள்ள 849 குடும்பங்களும் இதன் மூலம் நன்மையடையவுள்ளன.

சமுர்த்தி வங்கியின் முகாமையாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரீ.கே.றஹ்மத்துல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் (நளீமி) விஷேட அதிதியாக கலந்து கொண்டதுடன் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அகமட் நஸீல், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம். தஸ்லீம், முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.செல்வகுமார், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் பிரியந்தி வேரகொட மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


UMAR LEBBE NOORUL HUTHA UMAR 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்