எழுதுமட்டுவாழில் கைக்குண்டு மீட்பு

சாவகச்சேரி நிருபர்

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாழ் பகுதியில் துர்க்கை அம்மன் ஆலய வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் 27/05 வெள்ளிக்கிழமை வெடிக்காத நிலையில் கைக் குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் கைக் குண்டு ஒன்று காணப்படுவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைக் குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்