விடுதலைப்புலிகள் காலத்தைப் போன்று சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்-தவிசாளர் வாமதேவன்.

சாவகச்சேரி நிருபர்
நாட்டில் தற்போது நிலவி வருகின்ற பொருளாதாரப் பிரச்சனைகளை சமாளிக்க விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்த காலத்தில் காணப்பட்ட சுயசார்புப் பொருளாதாரக் கட்டமைப்பினை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என சாவகச்சேரிப் பிரதேசசபைத் தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்துள்ளார்.25/05 புதன்கிழமை சாவகச்சேரிப் பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வில் தலைமையுரை ஆற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
தற்போது நாட்டில் நிலவி வருகின்ற பொருளாதாரப் பிரச்சனையை தீர்க்க சுய சார்புப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்த காலத்தில் பொருளாதார ரீதியாக கட்டமைப்பு ஒன்று இருந்தது.அதனால் சுயசார்புப் பொருளாதாரம் வளர்க்கப்பட்டு பொருளாதார தடை விதித்த போதிலும் கூட பட்டினி இல்லாத நிலை காணப்பட்டது.விடுதலைப்புலிகள் காலத்தில் எரிபொருள் உள்ளிட்ட தேவைகளை நிவர்த்தி செய்ய  தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி குறைந்த செலவில் வாகனங்களை இயக்கினோம். ஆனால் இன்று எரிபொருள் விலை எகிறிய போதிலும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை காணப்படுகிறது.அரசாங்கம் கடன் வாங்குகின்றனரே தவிர சுயசார்புப் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை.என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.