6 ஆம் திகதி முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாது
இலங்கை தனியார் பஸ்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (06) முதல் சேவைகளை விலக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது.
போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு போதியளவு டீசல் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காகவே இதுவரையில் பஸ்கள் இயக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இன்னும் சில தினங்களுக்குள் எரிபொருள் நெருக்கடி தீர்க்கப்படாவிட்டால், அடுத்த வாரம் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும்.
குறித்த நெருக்கடி தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதிலும் இதுவரை தீர்வுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை