புதிய இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்
இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே இன்று (ஜூன் 01) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
24ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள அவர் தனது உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை நேற்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இராணுவத்தின் மிக மூத்த அதிகாரியான விக்கும் லியனகே தனது புதிய பதவியில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே 1986 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டதுடன், தியத்தலாவவில் உள்ள புகழ்பெற்ற இலங்கை இராணுவ அகாடமியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை மேற்கொண்டு பின்னர் பாகிஸ்தான் இராணுவ அகாடமியில் பயின்றார்.
அவரது 35 ஆண்டுகால இராணுவ வாழ்க்கையில், படைப்பிரிவுத் தளபதி, தளபதி மற்றும் 4வது கஜபா படைப்பிரிவின் துணைத்தளபதி உட்பட பல பதவிகளை அவர் வகித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது, ​​ஜெனரல் விக்கும் லியனகே 57 மற்றும் 56 ஆவது படைப்பிரிவுகளின் 8 ஆவது கஜபா படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கினார். மேலும் புலிகளுக்கு எதிரான போரில் தீவிரமாக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, ரண விக்கிரம, ரண சூர போன்ற வீர விருதுகளை பெற்றுள்ளார்.
புதிய இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்