புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு வரணி ஒன்றியத்தால் மடிக்கணனி.
சாவகச்சேரி நிருபர்
இவ்வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த தென்மராட்சி- வரணி பிரதேச மாணவர்கள் 16 பேருக்கு 29/05/2022 ஞாயிற்றுக்கிழமை மடிக்கணனிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சிய வரணி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யா/இடைக்குறிச்சி சுப்பிரமணிய வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரனும்,சிறப்பு விருந்தினராக வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவனும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை