செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு.
சாவகச்சேரி நிருபர்
மாதகல் நற்குண முன்னேற்ற அமைப்பு முன்பள்ளியின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 30/05/2022 திங்கட்கிழமை பிற்பகல் மாதகல் நுணசை மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் தே.மகேந்திரனும்,சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் கு.குகானந்தனும், கௌரவ விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேசசபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வி.தயாளினியும் கலந்து சிறப்பித்ததுடன் ,சிறார்களுக்கான பரிசில்களையும் வழங்கிக் கௌரவித்தனர்.


கருத்துக்களேதுமில்லை