ரோட்டரிக் கழகத்தால் பொதுமலசலகூடம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

சாவகச்சேரி நிருபர்
சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம்-நாயன்மார்கட்டு பாரதி சனசமூக நிலையத்தில் அமைக்கப்பட்ட பொதுமலசலகூடம் 30/05 திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ரோட்டரி மாவட்ட நிதி அனுசரணை மற்றும் கண்டி ரோட்டரிக் கழக நிதி அனுசரணையில் அமைக்கப்பட்ட பொதுமலசலகூடத்தை கழகத்தின் மாவட்ட உதவி ஆளுநர் ரோட்டரியன் ந.சுகந்தன் வைபவ ரீதியாக திறந்து வைத்திருந்தார்.நாயன்மார்கட்டு மக்களின் பயன்பாட்டினைக் கருத்திற்கொண்டு பாரதி சனசமூக நிலையத்தில் குறித்த மலசலகூடம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்