கால்வாயில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி ; கிளிநொச்சி மருதநகரில் சம்பவம்

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் நீர்பாசன கால்வாயில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டுக்கு முன்னால் உள்ள வயல்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் குழந்தை தவறி விழுந்தாக பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கிளிநொச்சி மருதநகரைச் சேர்ந்த நிஷாந்தன் சபீசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறந்த குழந்தை தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போன நிலையில் அவரது சடலம் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (4 ம் திகதி) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்