பசுமை இயக்கத்தின் சூழல்தின உரையரங்கு ஆவரங்காலில் இடம்பெற்றது

 

தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் உலக சுற்றுச்சூழல்தின உரையரங்கு நேற்று
ஞாயிற்றுக்கிழமை (05.06.2022) சிறப்பாக நடைபெற்றுள்ளது. இவ்வுரையரங்கு
தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த.
யுகேஸ் தலைமையில் ஆவரங்கால் கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது. ஆசிரியர் சபா.
குகதாசன் வரவேற்புரை நிகழ்த்த யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை
விரிவுரையாளர் ச. ரவி, தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன்
ஆகியோர் சுற்றுச்சூழல் தொடர்பாகச் சிறப்புரையை ஆற்றியிருந்தார்கள்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்
விதமாகவும் அவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும்
நோக்கிலும் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு தொடர்ச்சியாகவே உலக சூழல் தின உரையரங்கு நடைபெற்றுள்ளது.
இவ்வுரையரங்கில் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த மாணவர்களும் பெற்றோர்களும் அதிக
எண்ணிக்கையில் கலந்து கொண்டிருந்தார்கள்.
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் தொடர்பான வினாக்கள் வினவப்பட்டுச் சரியாக விடையளித்த
மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அத்தோடு பங்கேற்ற அனைத்து
மாணவர்களுக்கும் சூழல் பாதுகாப்பு மேற்கோள்கள் அடங்கிய அப்பியாசக் கொப்பிகள்
வழங்கப்பட்டன. கற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் அப்பியாசக் கொப்பிகளுக்கான
அனுசரணையை கனடாவிலுள்ள ரொறன்ரோவின் மனிதநேயக் குரல் எனும் அமைப்பு
வழங்கியிருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.