சீமெந்து விலை அதிகரிப்பால் கட்டுமானத் துறையில் உள்ளோர் விவசாயத்தை நாடுகின்றனர் – தேசிய கட்டிடத் தொழிலாளர் சங்கத் தலைவர்

வற் வரி அதிகரிப்பினால் சீமெந்து மூடை ஒன்றின் விலையை அதிகரித்துள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தற்போது கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் பலர் வேலையிழந்துள்ளதால், அவர்கள் பயிர்ச்செய்கையின் பக்கம் திரும்பத் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக அமைச்சர்கள் பலருடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

நிர்மாணத்துறை தற்போது மந்தநிலையில் உள்ளதாகவும், கட்டுமானம் தொடர்பான பொருட்களின் விலைகள் பாரியளவில் உயர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,

“தற்போது எமது சங்கம் அனைத்து கட்டுமானங்களையும் நிறுத்திவிட்டது. அனைத்து கட்டுமானங்களையும் நிறுத்துமாறு சாதாரண மக்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”
“வெளிநாட்டு நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் சீமெந்தை பொதுமக்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிமெந்து விலையையும் ஆய்வு செய்ய வேண்டும்.

இலங்கையில் உள்நாட்டில் கிடைக்கும் சீமெந்து ஏராளமாக உள்ளது. இறக்குமதி செய்யும் சீமெந்து மூலம் இந்த விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதே விலை உள்ளூர் உற்பத்தியாளர்களால் நிர்ணயிக்கப்படுகிறது.

“இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு நுகர்வோர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, உள்ளூர் சிமெந்தை நாடினால், அது நியாயமான விலைக்கு எளிதில் கிடைக்கும்.” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.