நாளை(08) சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது; லிட்ரோ!!

நாடு முழுவதும் நாளை(08) சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் எடைகொண்ட எந்தவொரு சமையல் எரிவாயுவும் நாளைய தினம் விநியோகம் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்