நுவரெலியாவில் வெற்று எரிவாயு சிலிண்டர்கள் நீண்ட வரிசையில் – நடைபாதையில் பயணிப்போர் பாதிப்பு!!

சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதற்காக நுவரெலியா பிரதான நகர மக்கள் கடந்த ஐந்து நாட்களாக வெற்று எரிவாயு சிலிண்டர்களை சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசையில் அடுக்கி வைத்து சென்று விடுகின்றனர். இவ்வாறு சிலிண்டர்கள் நடைபாதையில் வைக்கப்பட்டுள்ளமையால் பாதசாரிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

 

எரிவாயு விநியோகம் செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்தல் விடுத்துள்ள நிலையில் நுவரெலியா பிரதான நகரிலுள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் , பொது மக்கள் என நடைபாதையில் நீண்ட வரிசையில் வைத்து ஒன்றுடன் ஒன்றை இணைத்து கயிறு மற்றும் இரும்புச் சங்கிலிகளைப் பயன்படுத்தி கட்டி வைத்துள்ளனர் இதனால் பாடசாலை மாணவர்கள் ,முதியோர்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் நுவரெலியா பிரதான நகருக்கு போதுமானளவு சமையல் எரிவாயு வராததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.