தொலைபேசிகளின் குறைந்தபட்ச விலை 80,000 – 90,000 ரூபா ?

நாட்டில் அரசு விதித்துள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் வற்(vat) வரி அதிகரிப்பு காரணமாக கையடக்கத் தொலைபேசிகளின் குறைந்தபட்ச விலை விரைவில் 80,000 ரூபா முதல் 90,000 ரூபா வரை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக கையடக்கத் தொலைபேசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் சுமார் 20,000 ரூபாவாக இருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை தற்போது 50,000 ரூபாவை எட்டியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்தோடு கையடக்கத் தொலைபேசியுடன் தொடர்புடைய உபகரணங்கள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளன. இதனால் நுகர்வோர் புதிய கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதை, பழைய தொலைபேசிகளை திருத்துவதை தவிர்த்து வருகின்றனர்.

இதனால், பல கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாகவும், மேலும் பல விற்பனை நிலையங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்