இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு..

நாட்டின் பல பகுதிகளிலும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது சம்பளப் பிரச்சினையை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இவ்வாறு பணிக்கு சமூகமளிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் சேவையில் ஈடுபடாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்