ஊழல் அற்ற நிர்வாகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பயணிக்கிறோம்-அங்கஜன் எ.பி

சாவகச்சேரி நிருபர்
நாட்டில் ஊழல்கள் அற்ற நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் செயலாற்றி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
09/06 பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மின்சார திருத்தச் சட்டமூல வாக்கெடுப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் தனது அறிக்கையில்;
இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் திருத்தங்கள் இன்றி நிறைவேறியுள்ள நிலையில் குறித்த சட்டமூலத்தில் ;புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை தனியாருக்கு வழங்கும் போது வெளிப்படைத்தன்மையான கேள்வி கோரல்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனும் திருத்த முன்மொழிவை பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சபையில் முன்வைத்திருந்தார்.குறித்த முன்மொழிவுக்கு ஆதரவாக நான் வாக்களித்திருந்தேன்.
தனியார் நிறுவனங்களுக்கு பாரிய திட்டங்களைக் கையளிக்கும் போது திறந்த கேள்வி கோரல் முறைமையைக் கடைப்பிடிப்பதால் ஊழலற்ற நிர்வாகத்தைக் கட்டியெழுப்ப முடியும்.மாறாக கேள்விகோரல் இன்றி திட்டங்களை கையளிக்கும் போது அதில் ஊழல்-மோசடிகள் இடம்பெற வாய்ப்புள்ளது.
எமது நாட்டிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் அவசியம் என்பதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்.அதேவேளையில் அந்த திட்டங்களில் ஊழல்கள் நடக்காமல் தடுக்க வேண்டியதும் மக்கள் பிரதிநிதிகளின் தார்மீகப் பொறுப்பு.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.