யாழ்.நெடுந்தீவில் 300 பேருக்கு உணவுப் பொதிகள் வழங்கல்!

நெடுந்தீவு பகுதியில் உள்ள ஆறு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் வறிய நிலை 300 பேருக்கு இன்று உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்(ITR) யுகம் வானொலி கனடா ஆகியவற்றின் பணிப்பாளருமான யாழ், தீவகம்,வேலணை மேற்கு சரவணையை சேர்ந்த திரு.விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில் மேற்குறித்த பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானங்களைக் கொண்ட வறிய நிலை குடும்பங்களின் 300 பேருக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார உதவிப் பணியாக அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகியான செயலாளர்,ந.விந்தன் கனகரட்ணம்,தீவக சிவில் சமூக செயற்பாட்டாளர் க.குணாளன்,சமூக சேவையாளரும் பிரபல தொழிலதிபருமான கலாநிதி மு.அகிலன்,பூமணி அம்மா அறக்கட்டளையின் பொருளாளர் எஸ்.கீர்த்தனா,அறக்கட்டளையின் நிர்வாகசபை உறுப்பினர்களான எஸ்.கார்த்திகா,விதுஷா,சமாதான நீதவானும் இலங்கை செஞ்சிலுவை சங்க நெடுந்தீவு கிளை தலைவரும் நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவரும் இலங்கை செஞ்சிலுவை சங்க யாழ் மாவட்ட பொருளாளருமான எ.அருந்தவசீலன்,நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை குருவானவர் பி.எஸ்.றொக்ஷன்,சமூக சேவையாளர் வி.ருத்திரன்,சமூக சேவையாளர் தவம்,சமூக சேவையாளர் மீ. சேசுதாசன் ஆகியோரால் குறித்த பகுதியில் உள்ள மக்களுக்கு இன்று சமைத்த உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்