மத சுதந்திரத்திற்கான அருங்காட்சியகம் மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம்!! 

(மட்டக்களப்பு விசேட நிருபர்)
மத சுதந்திரத்திரத்திற்கான நடமாடும் மெய்நிகர் அருங்காட்சியகம் நேற்று 10/06/2022 திகதி வெள்ளிக்கிழமை  மட்டக்களப்பில் முதல் முதலாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகத்திற்கு பாரிய தொண்டாற்றிவரும் அரச சார்பற்ற சமூக தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்துவரும் LIFT நிறுவனத்தி அனுசரனையில் குறித்த
மத சுதந்திரத்திரத்திற்கான மெய்நிகர் அருங்காட்சியகம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
LIFT நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி.ஜானு முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி.கலாராணி ஜேசுதாசன் கலந்துகொண்டதுடன், குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக சட்ட ஆலோசகர் யாமினி ரவீந்திரன், SLCDF நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பொறுப்பாளர் ஆறுமுகம் சொர்ணலிங்கம், ADT நிறுவனத்தின் பிரதம நிருவாக உத்தியோகத்தர் கொட்பிறி யோகராஜா, ADT நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் செல்வி.யாமினி ரவீந்திரன், ADT நிறுவனத்தின் இளைஞர் சுவிசேஷக் கூட்டணியின் தலைவர் மைக் கேப்ரியல், Amcor நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் யோ.சிவயோகராஜன் உள்ளிட்டோர் கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இலங்கையில் நிலவும் மத சுதந்திரம், வன்முறைகள், சமூக ஊடகங்களின் பங்களிப்பு, இளைஞர்கள் மத்தியில் மத சுதந்திரத்தை பேணுதல், அமைதியான சகவாழ்விற்கான சவால்கள், மதம் மற்றும் காலனித்துவ அரசு, சமூகங்களுக்கிடையேயான இன நல்லுறவு, சட்டங்கள், சமய கொள்கைகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இந்நிகழ்வின்போது இளைஞர் யுவதிகளுக்கிடையில் மத நல்லிணக்த்தை வலுப்படுத்தும் ஓர்
செயற்பாடாக “மத சுதந்திர அருங்காட்சியகம்” தொடர்பான திட்டத்தின் எதிர்கால
செயற்பாடுகள் பற்றிய பொதுக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்ததுடன், Alliance Development Trust (ADT) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கிடையில் மத நல்லிணகத்தை வலுப்படுத்தும் ஓர்
செயற்பாடாகவே “மத சுதந்திர அருங்காட்சியகம்” எனும் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.