மாணவர்களுக்கான   மதிய உணவுத் திட்டம் 

புங்குடுதீவு மகா வித்தியாலய பழைய மாணவர்களின் நிதி அனுசரணையில்  மாணவர்களுக்கான ”மதிய உணவுத் திட்டம்”  ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இச்செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் மாகோ சின்னத்தம்பி கனகலிங்கம் ( முன்னாள் விரிவுரையாளர். பேராதனை பல்கலைக்கழக ம் )  அவர்கள் முன்னின்று உழைத்திருந்தார்.  இந்நிகழ்வில்  ஓய்வுநிலை பேராசிரியர் கா. குகபாலன் , வேலணை கோட்ட கல்வி அதிகாரி சசிதரன்,  வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் . பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் மாணவர்களுக்கான  நூல்களும் வழங்கி வைக்கப்பட்டன .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்