புளியந்தீவு தெற்கு வட்டாரத்தில் LED மின்விளக்குகள் பொருத்தும் செயற்திட்டம்…

சுமன்)

மட்டக்களப்பு மாநகரசபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாநகர வட்டாரங்களுக்கு மிகை ஒளியூட்டல் வேலைத் திட்டத்தின் கீழ் புளியந்தீவு தெற்கு 18ம் வட்டாரத்திற்கான LED  மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடுகள் இன்றைய தினம் வட்டார மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

கடந்த காலத்தில் மாநகரசபையில் ஏற்படுத்தப்பட்டிருந்த நிருவாகக் குழப்ப நிலமை காரணமாக நகரின் பல பிரதேசங்கள் மின் விளக்குகள் மாற்றப்படாமல் இருள் சூழந்த பகுதியாகக் காணப்பட்ட நிலையில் தற்போது மாநகரசபையினால் பழுதடைந்த மின் விளக்குகள் மாற்றல் மற்றும் வட்டாரங்களின் பிரதான சந்திகளில் LED மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடுகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் முன்மொழிவின் அடிப்படையில் புளியந்தீவு தெற்கு வட்டாரத்தில் வாவிக்கரை வீதி 01 மேல்மாடித் தெரு சந்தி, வாவிக்கரை வீதி 01 நல்லையா வீதி சந்தி, நல்லையா வீதி சூரியா ஒழுங்கை சந்தி, நல்லையா வீதி வன்னியனார் வீதி சந்தி, வைத்தியசாலை வீதி மாணிக்க சதுக்கம் சந்தி, சுமைதாங்கிப் பாலம் சந்தி, வாவிக்கரை வீதி 02, வாவிக்கரை வீதி 02 03ம் குறுக்குத் தெரு சந்தி, 03ம் குறுக்குத் தெரு புளியடி ஒழுங்கை சந்தி ஆகிய இடங்களில் மேற்படி LED மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஒளிரூட்டப்பட்டன.

மேற்படி மின்விளக்குகள் பொருத்தும் செயற்பாட்டின் போது மாநகரசபை பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர் பு.ரூபராஜ், புளியந்தீவு தெற்கு சனசமூக நிலைய நிலையத்தினர், புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தினர் சமூகமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்