பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் இருந்து 4 கைதிகள் விடுதலை!!

(சுதா)
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிமேதகு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று (14) திகதி  மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வந்த 4 சிறைக் கைதிகள் இன்று (14) திகதி காலை மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர அவர்களின் வழிகாட்டலில் பிரதான ஜெயிலர் ஆர்.மோகன்ராஜ் முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், இதில் நால்வரும் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள சிறைகளில் இருந்து 173 சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஏலவே தெரிவித்திருந்தார்.
இதன்படி, தண்டனை இரத்து ஊடாக 141 கைதிகளையும், 14 நாட்கள் தண்டனை காலம் குறைப்பின் ஊடாக 32 கைதிகளையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.