தலவாக்கலையில் மரம் விழுந்து ஒருவர் பலி

(க.கிஷாந்தன்)

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த செல்லதுரை மணிமாறன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹேலீஸ் பிளான்டேசன் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் மரம் வெட்டும் பணிகள் மேட்கொள்ளப்பட்டு வருகின்றன .
குறித்த தொழிலாளியும் மற்றொரு தொழிலாளியும் நேற்றைய தினம் தோட்டத்தில் பள்ளத்தாக்கு பகுதியொன்றில் மரம் வெட்டிக் கொண்டிருந்துள்ளனர்.

அச்சமயம் மரம் குறித்த நபரின் மார்பு பகுதியில் வந்து மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்