சிறுமி ஆயிஷா படுகொலையை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்திலே விழிப்பூட்டல் வேலை திட்டங்கள் தீவிரம்

பண்டாரகம பிரதேசத்தில் அட்டுலுகம பகுதியை சேர்ந்த 09 வயது சிறுமி பாத்திமா ஆயிஷா படுகொலையை தொடர்ந்து பிள்ளைகளை பாதுகாப்போம் என்கிற விழிப்பூட்டல் வேலை திட்டம் சமூக சேவைக்கான நட்புறவு ஒன்றியத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளது.

இதற்கு அமைய அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் பிள்ளைகளுக்கு விழிப்பூட்டல் செயலமர்வுகளை ஒன்றியம் மேற்கொள்ள தொடங்கி உள்ளது. கல்முனையில் தரம் 07, 08 மாணவர்களுக்கு ஒன்றியத்தால் நடத்தப்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சிறப்பு விழிப்பூட்டல் கருத்தரங்கு வரவேற்பை பெற்று உள்ளது.

இதில் ஒன்றியத்தின் தலைவர் ஏ. றோஸான் முஹம்மத்  வளவாளராக கலந்து கொண்டு பேசியபோது தற்போது நாடு பூராவும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்  கூடுதலாக இடம்பெற்று வருகின்றன, படுகொலைகள்கூட இடம்பெற்று உள்ளன, தற்கொலைகளும் நடக்கின்றன, சிறுவர் சமுதாயம் பாதுகாக்கப்பட வேண்டும், அதே போல சிறுவர்கள் மிகுந்த சுய விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்