அம்பாறையில்  சுற்றிவளைப்பு  : வியாபார நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை! 

அம்பாறை மாவட்டத்தில் அதிக விலைகளை விற்ற பொருட்கள் சுற்றிவளைப்பு கைப்பற்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பாவனையாளர் அதிகார சபை.
அம்பாரை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு தொடர்ந்தேர்ச்சியாக கிடைக்க பெறும் விவசாய பயளைகள்,கிருமி நாஷினி எண்ணெய்கள் தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து அம்பாரை மாவட்ட எல்லைகளுக்குள் இடம் பெறும் மோசடிகள், விலை மாற்றம், அதிக விலை மற்றும் பதுக்கள் வியாபாரம் தொடர்பில் அதி கூடிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் விவசாயிகள் அவதானமாக இருக்குமாறும் இவல்வ்வாறான குற்றச்சாட்டில் ஈடுபடுவோருக்கு எதிராக எவ்வித பாரபட்சமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அம்பாரை மாவட்ட தலைமை அதிகாரி சாலிந்த நவரத்ன பண்டார அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி கிடைக்க பெறும் முறைப்பாடுகள் அனைத்தும் அதிக இலாபம் ஈட்டும் நோக்கில் வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் பொருள் ஒன்றிற்கு மும்மடங்காக விலை வைத்து விற்பனை செய்வதாகவும் அதிக முறைப்பாடுகள் கிடைக்க பெறுவதாக கூறிய அவர் அண்மையில் சம்மாந்துறை நீதவான் எல்லைக்குள் அட்டப்பள்ளம், நிந்தவூர், சம்மாந்துறை பிரதேசத்தில் அதிகதிகமான வர்த்தகர்கள் திடீர் சுற்றிவளைப்பின் போது மாட்டி கொண்டதாகவும், பாவனைக்கு உதவாத காலவதியான பொருட்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் மேலும் இவ்வாறான சூழ் நிலையில் குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக இறுக்கமான நிலைமை கையாள்வதனூடாக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க படும் எனவும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.