சாவகச்சேரி நகரசபையால் மடத்தடியில் பாரம்பரிய மடம் மீள்நிர்மானம்.

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி நகரசபையால் மடத்தடிச் சந்திப் பகுதியில் காணப்பட்ட பாரம்பரிய மடம் மீள்நிர்மானிக்கப்பட்டு அண்மையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.சாவகச்சேரி நகரசபையின் மண்டுவில் வட்டார உறுப்பினர் க.கஜிதனின் கோரிக்கைக்கு அமைவாக நகரசபையின் 10இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மடத்தடி மடம் மீள அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.திறப்புவிழா நிகழ்வில் சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் சிவமங்கை இராமநாதன்,சபையின் செயலாளர் சுபாஸ்கரன், நகரசபை உறுப்பினர்கள்,ஊழியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மடத்தடி மடம் கடந்த காலத்தில் மீசாலை போன்ற பிரதேசங்களில் இருந்து கால்நடையாக சாவகச்சேரி சந்தைக்கு வருபவர்கள் இளைப்பாறிச் செல்லும் இடமாகக் காணப்பட்டது.தற்போது அவ்வாறு கால்நடையாக சந்தைக்கு செல்பவர்கள் அரிது என்ற போதிலும் பாரம்பரிய சின்னமான குறித்த இடம் அழிவடைந்துவிடக்கூடாது என்ற நல் எண்ணத்தில் புதுப்பொலிவூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்