புகையிரதத்தில் யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நிமல்.
சாவகச்சேரி நிருபர்
துறைமுகங்கள்,கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 18/06/2022 சனிக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பேரில் வருகை தந்த அமைச்சர் யாழ்ப்பாண விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக செயற்பாடுகளை ஆராயவுள்ளார்.
தற்போது நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் உச்சம் தொட்டிருக்கும் நிலையில் அமைச்சர் நிமல் சிறிபால மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ஆகியோர் கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களேதுமில்லை