பாராளுமன்ற உறுப்பினரானார் தம்மிக்க பெரேரா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இலங்கையின் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா இன்று சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு பதிலாகவே இவர், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்