jvpயை இணைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சஜித் திட்டம்

ஜே.வி.பி.யை இணைத்துக்கொண்டு சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சுயேச்சைக் கட்சிகளின் 11 தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் தற்போதைக்கு பிளவுபடவில்லை. ரணில் பதவி பறிக்கப் போகிறார் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. ஜே.வி.பியுடன் இணைந்து சஜித் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அவர் பிரதமராக விரும்புகின்றார்.

அவ்வாறு அனைத்துக்கட்சி அரசு அமைக்கப்பட வேண்டுமானால், அதன் கொள்கையும், நடவடிக்கையும் மட்டுமே எங்களுக்கு முக்கியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.