இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நடாத்தும் சர்வதேச யோகாசன தினம் – ஜூன் 21.

கமு/கமு உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை மைதானத்தில் 21.06.2022 செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணிக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்
திரு.ரி.ஜெ. அதிசயராஜ் தலமையில் இடம்பெற்றதுடன்
இந்நிகழ்விற்கு திரு முன்னிலை அதிதியாக பொது முகாமையாளர், இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு
ஸ்ரீமத் சுவாமி தட்ஷஜானந்தஜீ மகராஜ் அவர்களும் , பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எம்.ஏ.டக்லஸ் அவர்களும், கௌரவ அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
திரு. வே .ஜெகதீசன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக
நாவிதன்வெளி பிரதேச செயலாளர்
திரு. சோ. ரங்கநாதன்,காரைதீவு பிரதேச செயலாளர் ஜெகராஜன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு. வி.பபாகரன்,
நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் திரு. பே.பிரணபரூபன் அவர்களும், விசேட அதிதிகளாக கல்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. எஸ்.லக்குணம், கமு/கமு/ கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அதிபர் அருட்தந்தை சந்தியாகு, கமு/கமு உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை அதிபர் திரு .எஸ். கலையரசன், கல்முனை வடக்கு தலைமைப்பீட சமுத்தி முகாமையாளர் திரு. கே.இதயராஜ், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு .எ. அமலநாதன், கல்முனை வடக்கு கலாசார உத்தியோகத்தர் திரு.த.பிரபாகரன் ,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. வசந்தினி யோகேஸ்வரன், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள கற்கை நிலைய வளவாளர்களான கே.சந்திரலிங்கம் கே.குமாரதாசன், பிரதீபன் , எஸ்.சிறிக்காந்தன் , மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு. கு.ஜெயராஜி, திரு ந.பிரதாப், கல்முனை வடக்கு பிரதேச செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. க.சிறிப்பிரியா, நிந்தவூர் பிரதேச செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. பா.சுஜிவினி, நாவிதன்வெளி பிரதேசசெயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. க.நிலோந்திரன்,
மற்றும் ஆலய பரிபாலன சபையின் பிரதிநிதிகள், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், இந்து மகளிர் மன்ற உறுப்பினர்கள், மாதர் சங்கத்தின் உறுப்பினர்கள் , மற்றும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள்,பாடசாலை மாணவர்கள்,கிராம அபிவிருத்தி சங்கங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், உட்பட 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வுகள் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் இடம் பெற்றதுடன் ஏன்பாடுகளை இந்து கலாசார திணைக்களத்தின் சார்பில் மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் திரு கு.ஜெயராஜி மேற்கொண்டார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்