கல்முனை, சாய்ந்தமருதில் வரலாறு காணாத எரிபொருள் வரிசை : வீதிப்போக்குவரத்தும் ஸ்தம்பிதம்

.

நூருள் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் காலை முதல் பல்வேறு குழப்ப நிலைக்கு மத்தியில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நீண்டவரிசையில் வாகனங்கள் காத்திருப்பதனால் போக்குவரத்து நெரிசல் அந்த இடத்தில் ஏற்பட்டுள்ளது.

சாய்ந்தமருது ஆரம்பிக்கும் ஸாஹிரா கல்லூரி சந்தி முதல் முடிவடையும் மாளிகா சந்திவரை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள், கார்கள் போன்ற வாகனங்களில் வரிசையில் இன்று அதிகாலை முதல் எரிபொருளை பெற நீண்ட வரிசையில் பொதுமக்கள், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், முன்கள பணியாளர்கள் என பலரும் வாகனங்களுடன் காத்திருந்தனர்.

இதனால் அவசர சிகிச்சைக்காக செல்லும் அம்புலன்ஸ் வண்டிகள் உட்பட அவசர முன்களப்பணி செய்யும் அரச திணைக்கள வாகனங்கள், பொதுமக்கள் எனப்பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்ததுடன் வாகன நெரிசலை கட்டுப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்கும் பணியை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

அதே போன்று இன்று மாலை கல்முனைஅமைந்துள்ள எரிபொருள் நிரப்புநிலையத்தில் எரிபொருள் வழங்குவதாக கிடைத்த தகவலை அடுத்து அவ்விடத்தில் வாகனங்களுடன் கூடிய மக்களினால் அக்கரைப்பற்று- கல்முனை பிரதான வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் அவ்வீதியால் பயணிக்க முடியாது வாகன சாரதிகள் மாற்றுப்பாதைகளில் பயணிப்பதையும் கல்முனை போக்குவரத்து பொலிஸார் நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடுமையாக போராடிவருவதையும் காணக்கூடியதாக உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்