சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு மட்டும் கிழமையில் ஒருநாள் தனியாக  எரிபொருள் வழங்க தீர்மானம்

நூருள் ஹுதா உமர்
சாய்ந்தமருதிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு மட்டும் கிழமையில் ஒருநாள் தனியாக  எரிபொருள் வழங்க இன்று (22) புதன்கிழமை பிரதேச செயலத்தில்  நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்
ஏனைய நாட்களில் வழமை போன்று  சகலருக்கும் எரிபொருள் வழங்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர், ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள்,  அரச உயர் அதிகாரிகள், பொலிஸார், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே  இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பிரதேசத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இருந்தும் மக்களுக்கு எரிபொருள் முறையாக கிடைப்பதில்லை என நேற்று (21) பிரதேச செயலாளருக்கு பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் தினங்கள் முஹல்லா பள்ளிவாசல்கள் ஊடாக அறிவிக்க நடடிக்கை எடுக்கப்ட்டுள்ளது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்  சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.ஹிபத்துல் கரீம், செயலாளர் எம்.எம்.மன்சூர், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி சனூஸ் காரியப்பர், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர் உள்ளிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.