எரிபொருள் வரிசையில் நின்றவர் கழிப்பறையைப் பயன்படுத்தியதற்கு 100 ரூபா அறவிட்ட கடைக்காரர்!

ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் எரிபொருளுக்காக வரிசையில் நின்ற நபரிடம் கழிப்பறையைப் பயன்படுத்தியமைக்காக 100 ரூபா அறவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருளுக்காக சில நாட்கள் வரிசையில் நின்ற பிறகு, குறித்த நபர் கழிப்பறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அருகிலுள்ள கடைக்குச் சென்று தனது தேவையைத் தெரிவித்துள்ளார்.

அங்கு கடை உரிமையாளர் கடைக்குப் பின்னாலுள்ள கழிப்பறையை சுட்டிக்காட்டி தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பளித்தார்.

தேவையைப் பூர்த்தி செய்து கடைக்காரரிடம் நன்றி கூற முற்பட்டபோது, ​​கடைக்காரர் அந்த நபரிடம் கழிப்பறை பயன்படுத்தியதற்காக ரூ.100 கேட்டுள்ளார்.

பின்னர் கடை உரிமையாளரிடம் 100 ரூபாவைக் கொடுத்துவிட்டு கடையை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்