வெளிநாட்டுப் பணம் அனுப்பும் புலம்பெயர் பணியாளர்களுக்கு மின்சார வாகனம் வாங்க வாய்ப்பு :மனுஷ நாணயக்கார..

புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு சட்ட ரீதியான வழிகளில் பணம் அனுப்பும் போது அவர்கள் அனுப்பும் தொகையின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


ஜப்பான் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் நேற்று (22) ஜப்பான் நோக்கிச் செல்லும் 12 பேர் கொண்ட பணியாளர்கள் குழுவுக்கும் இஸ்ரேலுக்கு பணிக்காகச் செல்லும் நான்கு பேர் கொண்ட குழுவுக்கும் விமானச் சீட்டு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வரியில்லா வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதால், வங்கி முறையின் மூலம் சட்டரீதியாக பணம் அனுப்பும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்