மிக நீண்டகாலமாக திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர் பதுளை மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு திருடப்பட்ட ஒருதொகை பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்…..

மிக நீண்டகாலமாக திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர் பதுளை மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு  திருடப்பட்ட ஒருதொகை பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்     .

பதுளை நகரில் உள்ள வீடுகள் மட்டும் கடை தொகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் பதிவாகி வந்தமையை  அடுத்து பிரதேச மக்களினால் மாவட்ட பிராந்திய பொலிஸ் நிலையத்திற்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய தொடர்ச்சியாக தேடப்பட்டு வந்த குறித்த திருட்டு கும்பல் நேற்று பதுளை மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு கடைத் தொகுதி மற்றும் வீடுகளில் திருடப்பட்ட பொருட்களின் ஒரு தொகுதியையும்    சந்தேகநபர்  ஒருவரும்     கைது செய்யப்பட்டுள்ளார் .

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பதுளை மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ய நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் திருட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரியந்த சாமிந்த   தெரிவித்துள்ளார் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.