கல்முனை பொதுச் சந்தைக்கு அருகில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள நீர் ; வடிகான் உடைந்து நடுவே விழுந்து இடைமறித்து காணப்படும் பாரிய சுவர் துண்டு – சீர் செய்யுமாறு கோரும் பொது மக்கள் ..!

கல்முனை பொதுச் சந்தைக்கு அருகில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள நீர் ; வடிகான் உடைந்து நடுவே விழுந்து இடைமறித்து காணப்படும் பாரிய சுவர் துண்டு – சீர் செய்யுமாறு கோரும் பொது மக்கள் ..!
(நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்)
கல்முனை மாநகர பொதுச் சந்தைக்கு அருகில் உள்ள வடிகான் துப்புரவு இன்றியும் வடிகானின் ஒரு பகுதி உடைந்தும், வடிகானின் இடைநடுவே பாரியளவிலான சுவர் துண்டு உள்ளதுடன் நீண்ட நாட்களாக  நீர் ஓடாமல் தேங்கி காணப்படுகின்றமையினால் இடைக்கிடையே துர்நாற்றம் வீசுவதுடன் இதனால் வீதியினால் பயணிப்போர், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சந்தைக்கு வருகின்ற பொதுமக்கள் இதனால் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர் .
நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பாடசாலை மாணவர்கள், குறித்த வீதியை பயன்படுத்தும் நிலையில் வடிகானுக்கு முறையாக மூடியின்றியும் வடிகானுக்கு அருகில் புற்கள் வளர்ந்து பற்றையாக காட்சியளிப்பதுடன் வடிகானுக்கு அருகில் உள்ள சாந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தின் எல்லை சுவரின் ஒரு பகுதி பல மாதங்களுக்கு முன்னர் சுவர் துண்டு உடைந்து வடிகானின் கீழே விழுந்து இருப்பதுடன் வடிகானின் நடுவே பாரிய தடையாக காணப்படுவதுடன் குறித்த வடிகான் பகுதியில் நீர் ஒடாமல் நீர் தேங்கி நிற்பதுடன், நீண்ட நாட்களாக கவனிப்பாரற்று  உள்ளதை அவதானிக்க முடிகின்றது
அத்துடன் இதனுள் உடைந்த நிலையில் கூரை ஓட்டுத்துண்டுகள், கற்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், தகர டீன்கள், பொலித்தீன் பைகள் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றது. இதனால் சுகாதார சீர் கெடு ஏற்பட வாய்ப்புள்ளது.
கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் தினமக்கழிவகற்றல், வடிகன் முகாமைத்துவம் சிறப்பாக இயங்குவதாக ஆணையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதுபோன்று சுகாதரத்திற்கு அச்சுறுத்தலாக பல இடங்கள் மாநகர பிரதேசங்களில் காணப்படுகின்றது.
அத்துடன் குறித்த பகுதியை அண்மித்த பகுதியில்  பொதுச் சந்தைக்கு வரும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெரிசலை எதிர் நோக்குவதை அவதானிக்க முடிகின்றது. இது தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் கவனம் எடுக்குமாறு பொது மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.