479 அரிசி வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் – நுகர்வோர் விவகார அதிகார சபை..

அரிசி விலையைக் காட்சிப்படுத்த மறுத்து அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற 479 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.


அவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை 22 குற்றவாளிகளுக்கு சுமார் 3.2 மில்லியன் ரூபா அபராதம் விதித்துள்ளது.

இதன்படி, அதிகபட்ச சில்லறை விலைக்கு ஏற்ப அரிசியை விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில் அரிசியைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்