இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய பெருவிழாவின் முதல் நற்கருணை, உறுதிப்பூசுதல் வழங்கும் திருப்பலி!!

(மயிலம்பாவெளி நிருபர்)
மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் தொன்மை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களுள் ஒன்றாக திகழ்ந்துவரும் இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய
பெருவிழாவினை முன்னிட்டு இன்று 25.06.2022 திகதி சனிக்கிழமை பங்குத்தந்தை அருட்பணி அலெக்ஸ் றொபர்ட் அடிகளார் தலைமையில் முதல் நற்கருணை, உறுதிப்பூசுதல் வழங்கும் திருப்பலி மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய பேரருட்திரு கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகையினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு 37 சிறார்களுக்கு முதல் நற்கருணை மற்றும் உறுதிப்பூசுதல் அருட்சாதனங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்