அரிசி, மா, சீனி, பருப்பு உட்பட10 அத்தியாவசிய உணவுப் பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி!

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் திறந்த கணக்கு முறையின் கீழ் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரிசி, மா, வெள்ளைச் சீனி, சிவப்புப் பருப்பு, பால்மா , பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, செத்தல் மிளகாய், நெத்தலிக் கருவாடு மற்றும் கடலைப் பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை ஒப்புதல் ஜூலை 1 ஆம் திகதி முதல் இரண்டு மாதங்களுக்குச் செல்லுபடியாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்